அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யும் கடிதத்தை அன்வாரிடம் வழங்கினார் அந்தோணி லோக்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர்: போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக், அமைச்சரவை பதவியிலிருந்து விலகுவதற்கான தனது ராஜினாமா கடிதத்தை பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமிடம் நேற்று நேரடியாக வழங்கியதாகத் தெரிவித்துள்ளார்.

ஜனநாயக செயல் கட்சியின் (DAP) பொதுச் செயலாளருமான அந்தோணி லோக், கடிதத்தை வழங்கிய பின்னர் இந்த விவகாரம் தொடர்பாக பிரதமருடன் கலந்துரையாடியதாகக் கூறினார்.

“தற்போதைக்கு நான் அமைச்சர் பதவியில் தொடர்ந்து இருக்குமாறு பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளார். இருப்பினும், ராஜினாமா கடிதத்தை அவரிடம் ஏற்கனவே வழங்கிவிட்டேன்,” என்று அவர் தெரிவித்தார்.

அமைச்சர் பதவியிலிருந்து விலகுவது தொடர்பான கட்சியின் முடிவில் தாம் உறுதியாக இருப்பதாகவும் லோக் கூறினார். இறுதி முடிவை பிரதமரே எடுப்பார் என்றும், அதேவேளை முடிவு எடுப்பதற்கான ஒரு குறிப்பிட்ட காலக்கெடு இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *