கத்தார் டோஹாவில் ஏவுகணை தாக்குதல்: மலேசியரின் அனுபவம் பகிர்வு

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், மார்ச் 2-

கத்தாரின் டோஹா  நகரில் நேற்று காலை இடம்பெற்ற ஏவுகணை தாக்குதல் சம்பவம் அங்கிருந்த மக்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. காலை 8 மணியளவில் (மலேசிய நேரப்படி மதியம் 1 மணி) கேட்கப்பட்ட வெடிப்பு சத்தம் மிகவும் பலமாக இருந்ததாக அங்கு வசிக்கும் மலேசியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

2014 பிப்ரவரி முதல் கத்தாரில் பணிபுரிந்து வரும் 50 வயதுடைய முகமது பெளசி, தனது மனைவி மற்றும் ஒரு குழந்தையுடன் தெற்கு அல்.வராக் பகுதியில் வசித்து வருகிறார். அவரது இல்லம் தாக்குதல் நடந்த இடத்திலிருந்து சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் இருந்தபோதிலும், வெடிப்பு சத்தம் மிகவும் சக்திவாய்ந்ததாக இருந்ததாக அவர் கூறினார்.

“காலை நேரத்தில் ஏற்பட்ட வெடிப்பு சத்தம் மிகவும் பலமாக இருந்தது. எங்கள் வீட்டின் ஜன்னல்கள் மற்றும் கதவுகள் கூட அதிர்ந்தன. இருந்தாலும், இங்குள்ள பாதுகாப்பு நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது,” என்று அவர் தெரிவித்தார்.

அமெரிக்காவின் வான்படை  தளத்தை இலக்காகக் கொண்டு ஏவுகணை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. இந்த சம்பவம் ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல்  இடையேயான பதற்றமான நிலைமையின் பின்னணியில் இடம்பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், கத்தாரில் வசிக்கும் வெளிநாட்டு குடியிருப்பாளர்கள் பாதுகாப்பாக இருப்பதாக அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *