சீயா லீக் உலக சாம்பியன்
- Tamil Malar (Reporter)
- 15 Feb, 2026
கோலாலம்பூர், பிப். 15-
மலேசியாவின் முன்னணி பாரா பேட்மிண்டன் வீரர் Cheah Liek Hou, Para Badminton World Championships தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இரண்டு தங்கப் பதக்கங்களை வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்தார். அவர் தனிநபர் பிரிவில் தைவானைச் சேர்ந்த Jen Yuவை 21-6, 21-11 என்ற கணக்கில் எளிதாக வீழ்த்தினார்.
இந்த வெற்றியின் உற்சாகம் குறையாமல், ஆண்கள் இரட்டையர் SU5 பிரிவிலும் லீக் தனது கூட்டாளியான Faris Ahmad Azriவுடன் இணைந்து மீண்டும் சிறப்பான விளையாட்டை வெளிப்படுத்தினார். தைவான் ஜோடியை 23-21, 21-13 என்ற நேர் செட்களில் தோற்கடித்து இரண்டாவது தங்கத்தையும் கைப்பற்றினர்.
வரவிருக்கும் சீன புத்தாண்டை முன்னிட்டு கிடைத்த இந்த இரட்டை வெற்றி மிகவும் அர்த்தமுள்ளதாக உள்ளது என்று லீக் தெரிவித்தார். “இந்த இரண்டு தங்கங்கள் எனக்கு மிகப் பெரிய பரிசு போன்றது. இது என்னை மேலும் கடினமாக உழைக்க ஊக்குவிக்கிறது,” என்றார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



