முதலமைச்சரின் நேரடிக் கண்காணிப்பில் ‘சிங்கப்பெண் அதிரடிப் படை’ – அரசாணை வெளியீடு
- Surendran Sumdraraj
- 11 May, 2026
தமிழக பெண்களின் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் “சிங்கப்பெண் அதிரடிப் படை” என்ற புதிய சிறப்பு அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதாகவும், அது முதலமைச்சரின் நேரடி கண்காணிப்பில் செயல்படும் என்றும் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பது, அவசரநிலைகளில் விரைவான நடவடிக்கை எடுப்பது மற்றும் பெண்களின் பாதுகாப்பு குறித்த கண்காணிப்பை மேம்படுத்துவது ஆகிய நோக்கங்களுடன் இந்த புதிய அதிரடிப் படை அமைக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாணையின் படி, காவல்துறை, சமூக நலத்துறை மற்றும் பெண்கள் பாதுகாப்பு பிரிவுகள் இணைந்து இந்த அமைப்பின் கீழ் செயல்படும். மாநிலம் முழுவதும் பெண்கள் தொடர்பான புகார்கள் மற்றும் அவசர உதவிகளுக்கு உடனடி நடவடிக்கை எடுக்க தனிப்பட்ட கட்டுப்பாட்டு மையமும் உருவாக்கப்பட உள்ளது.
மேலும், கல்வி நிலையங்கள், வேலைத்தளங்கள் மற்றும் பொதுப் போக்குவரத்து மையங்களில் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான சிறப்பு கண்காணிப்புகளும் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு எதிரான இணையதள குற்றங்கள் மற்றும் மிரட்டல்களை கண்காணிக்க தொழில்நுட்ப பிரிவும் உருவாக்கப்படவுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *
Ponharini
Marriage life is totally problem.pls help



