அனைத்து ஓட்டுனர்களும் உரிமங்களை புதுப்பிக்க வேண்டும்!
- Muthu Kumar
- 27 Mar, 2026
கோலாலம்பூர், மார்ச் 27:
மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஓட்டுநர் உரிமம் காலாவதியாகிய மலேசியர்கள், BUDI95 திட்டத்தின் கீழ் மானிய விலையில் வழங்கப்படும் RON95 பெட்ரோலைப் பெறத் தகுதி பெற மாட்டார்கள் என்று சாலைப் போக்குவரத்துத் துறை (JPJ) தலைமை இயக்குநர் ஏடி ஃபட்லி ராம்லி தெரிவித்துள்ளார். தகுதியுடன் நீடிப்பதற்கு, அனைத்து ஓட்டுநர்களள் தங்களது உரிமங்களை நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் புதுப்பிக்க வேண்டும் என்று அவர் நினைவூட்டினார்.
மேலும், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு உரிமம் காலாவதியானவர்கள் அதைத் தானாகவே புதுப்பிக்க முடியாது என்றும், அங்கீகாரம் பெற்ற ஓட்டுநர் பயிற்சி நிறுவனத்தில் ஓட்டுநர் திறன் தேர்வை மீண்டும் எழுத வேண்டும் என்றும் ஏடி கூறினார்.மத்திய கிழக்கு மோதலின் தாக்கத்தைச் சமாளிப்பதற்கான ஒரு இடைக்கால நடவடிக்கையாக, மானிய விலையில் வழங்கப்படும் RON95 பெட்ரோலுக்கான மாதாந்திர 300-லிட்டர் ஒதுக்கீடு 200 லிட்டராகக் குறைக்கப்படும் என்று பிரதமர் அன்வர் இப்ராஹிம் முன்னதாக அறிவித்தார்.
ஒரு லிட்டர் RM1.99 என விலை நிர்ணயிக்கப்பட்ட இந்த மானிய எரிபொருளுக்கான புதிய ஒதுக்கீடு அடுத்த மாதம் முதல் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



