செராஸில் சட்ட விரோத முகவர்கள் கைது!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஆக 3: ஆவணங்களற்ற வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு மோசடியாக வழங்கப்பட்ட தற்காலிக வேலைவாய்ப்பு வருகை அனுமதிச் சீட்டுகளை (PLKS) வழங்கும் ஒரு கும்பலுக்கு சட்டவிரோத முகவராகச் செயல்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் மியான்மர் பெண் ஒருவரை குடிநுழைவுத் துறை கைது செய்துள்ளது.

சனிக்கிழமையன்று , பண்டார் மகோத்தா செராஸில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில் நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்ட எட்டு மியான்மர் குடிமக்களில் அப்பெண்ணும் ஒருவர் என்று குடிநுழைவு துறை தலைமை இயக்குநர் டத்தோ ஜகாரியா ஷாபான் கூறினார்.

மேலும், முதலாளிகளுக்குத் தொழிலாளர்களாக அனுப்பப்படுவதற்காகக் காத்திருந்ததாக நம்பப்படும் ஒரு மியான்மர் ஆணும், ஆறு மியான்மர் பெண்களும் கைது செய்யப்பட்டனர்."

29 முதல் 56 வயதுக்குட்பட்ட எட்டு சந்தேக நபர்களில், சந்தேகிக்கப்படும் சட்டவிரோத முகவர், விசா காலம் முடிந்தும் தங்கிய நான்கு பேர் மற்றும் செல்லுபடியாகும் அனுமதிச் சீட்டுகள் அல்லது பயண ஆவணங்கள் இல்லாத மூன்று வெளிநாட்டினர் ஆகியோர் அடங்குவர் என்று அவர் கூறினார். 

அந்தக் கும்பலால் யன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் ஒரு காரும் பறிமுதல் செய்யப்பட்டது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *