சட்டவிரோத கோயில் விவகாரம்… அரசு நியாயமான அணுகுமுறையைப் பின்பற்றுகிறது! - ஆர்.யுனேஸ்வரன்
- Shan Siva
- 09 Feb, 2026
கோலாலம்பூர், பிப் 9: அனுமதி இன்றி கட்டப்பட்ட கோயில்கள் தொடர்பான பிரச்சினையைத் தீர்ப்பதில் அரசு சமநிலையானதும் நியாயமானதும் ஆன அணுகுமுறையையே பின்பற்றுகிறது என்று தேசிய ஒற்றுமைத்துறை துணை அமைச்சர் ஆர். யுனேஸ்வரன் இன்று தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட வழிபாட்டுத் தலங்களின் நிர்வாகங்களுக்கு,
நடைமுறையில் உள்ள விதிமுறைகளை பின்பற்றுவதற்காக நியாயமான கால
அவகாசம் வழங்கி, இந்த விவகாரத்தை நுணுக்கமாக கையாளும்
அணுகுமுறையை புத்ராஜெயா மேற்கொண்டு வருவதாக அவர் கூறினார்.
அதே நேரத்தில், அவசரமான அல்லது பொறுப்பற்ற செயல்களால்
சமூகத்தில் பதற்றத்தை உருவாக்க யாரும் முயற்சிக்காமல் இருக்க அரசு உறுதியான
நிலைப்பாட்டையும் எடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
பொதுவான கொள்கை தெளிவானது. மசூதிகள், தேவாலயங்கள்,
கோயில்கள் என அனைத்து வழிபாட்டுத் தலங்களும் சட்டத்திற்கும் ஒரே
வழிகாட்டுதல்களுக்கும் உட்பட்டவையே. குறிப்பாக நிலம் தொடர்பான விவகாரங்களில் இது
மிக முக்கியம்.
மோதல்களின் மூலம் அல்ல, உரையாடல்
மற்றும் முறையான வழிகளின் மூலமே தீர்வுகளை தேட வேண்டும் என்று அவர் வெளியிட்ட அறிக்கையில்
கூறினார்.
உள்ளூர் சமூகங்களில் அரசியல் சூழ்நிலைகளும் கருத்து
வேறுபாடுகளும் இருந்தாலும், பரஸ்பர புரிதல், மரியாதை
மற்றும் ஒற்றுமையின் அடிப்படையில்தான் இந்த நாடு கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதை
மலேசியர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் யுனேஸ்வரன் கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



