பாஸ் கட்சியுடன் கூட்டணியா? எச்சரிக்கை! - அம்னோவுக்கு புவாட் சர்காசி நினைவூட்டல்

top-news

கோலாலம்பூர், ஜூன் 12: பாஸ் கட்சியுடன் ஒரு புதிய அரசியல் கூட்டணியை அமைப்பதில், அம்னோ எச்சரிக்கையாக இருக்குமாறு அம்னோ உச்ச மன்ற உறுப்பினர் புவாட் சர்காசி அம்னோவை எச்சரித்துள்ளார். பாஸ் கட்சி மீண்டும் மீண்டும் விவாகரத்து செய்யும் கட்சி என்று அவர் வர்ணித்தார்.

திருமணம் செய்துவிட்டுப் பின்னர் விவாகரத்து செய்ய விரும்புபவர்கள்பொதுவாகப் பிரச்சனைகளை உருவாக்குபவர்களாக இருப்பார்கள் என்று ரெங்கிட் சட்டமன்ற உறுப்பினருமான அவர் கூறினார். பெரசாத்து உடனான தனது கூட்டணியை முடிவுக்குக் கொண்டுவர பாஸ் சமீபத்தில் எடுத்த முடிவை அவர் குறிப்பிட்டார்.

அரசியலில், சில கட்சிகள் மற்றவர்களை எளிதாக 'திருமணம்' செய்துகொள்கின்றன, ஆனால் தங்கள் நோக்கங்கள் நிறைவேறவில்லை என்றால், எளிதில் விவாகரத்தும் செய்துவிடுகின்றன. அம்னோ கவனமாக இருக்க வேண்டும் என்று அவர் ஒரு முகநூல் பதிவில் கூறினார்.

நாட்டின் மிகப்பெரிய மலாய்-முஸ்லிம் கட்சிகளான அம்னோவும் பாஸ் கட்சியும், 2019-ல் பக்காத்தான் ஹராப்பான் கூட்டாட்சி அரசாங்கத்தை வழிநடத்தியபோது முறைப்படுத்தப்பட்ட முவாஃபாகத் நேஷனல் (MN) கூட்டணியின் கீழ் கூட்டாளிகளாக இருந்தன.

இருப்பினும், அடுத்த ஆண்டிலேயே பாஸ் கட்சி, பெர்சாத்துவுடன் இணைந்து பெரிகாத்தான் நேஷனலை உருவாக்கிய பிறகு இந்தக் கூட்டணி முறிந்தது என்பது குறிப்பிடத்தக்கது!

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தேடல்

செய்தி வகை

குறிச்சொற்கள்

சமூக இணைப்புகள்