கிளந்தான், பகாங் மாநிலத்திற்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
- Shan Siva
- 09 Nov, 2026
கோலாலம்பூர், நவ 9:தொடர் கனமழை காரணமாக கிளந்தான் மாநிலத்தில் ஒன்பது மாவட்டங்களிலும், பகாங் மாநிலத்தில் மூன்று மாவட்டங்களிலும் வரும் புதன்கிழமை வரை வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கிளந்தான் மாநிலத்தில் கோத்தா பாரு, தும்பாட், பாச்சோக், மாச்சாங், பாசீர் மாஸ், பாசீர் புத்தே, தானா மேரா, கோலா கிராய் மற்றும் ஜெலி ஆகிய ஒன்பது மாவட்டங்களும், பகாங் மாநிலத்தில் குவாந்தான், பெக்கான் மற்றும் ரொம்பின் ஆகிய மூன்று மாவட்டங்களும் வெள்ள அபாயம் உள்ள பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
மலேசிய தேசிய வெள்ள முன்னறிவிப்பு மையம் இந்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. மலேசிய வானிலை ஆய்வு மையம் தொடர்ந்து கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
குறிப்பாக கிளந்தான், கோலோக் மற்றும் கெமாசின் ஆறுகளின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் வெள்ளம் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் குவாந்தான், பெக்கான் மற்றும் ரொம்பின் மாவட்டங்களிலும் பல்வேறு ஆறுகளின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

