லாரியை மோதிய கார்! 18 வயது இளைஞர் பலி!
- Sangeetha K Loganathan
- 11 Dec, 2024
டிசம்பர் 11,
கட்டுப்பாட்டை இழந்த வாகனம் லாரியை மோதி விபத்துக்குள்ளானதில் 18 வயது கார் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கெத்தேரேவிலிருந்து Kampung Chekok Serendah செல்லும் சாலையில் நண்பகல் 12.20 மணிக்கு விபத்து ஏற்பட்டதாக Kota Bharu மாவட்டக் காவல் ஆணையர் Mohd Rosdi Daud தெரிவித்தார்.
18 வயதான Arif Imdad Ahmad Fairuz எனும் ஆடவர் பலத்த காயத்திற்கு இலக்கானதாகவும் எதிரில் வந்த லாரியை மோதியதில் லாரி ஓட்டுநர் நிலை தடுமாறி வாகனத்தை மோதி மரத்துடன் நசுக்கியதாக அவர் தெரிவத்தார்.
விபத்தில் 30 வயது லாரி ஓட்டுநர் எந்தவொரு காயமுமின்றி தப்பியதாகவும் விபத்தில் உயிரிழந்த 18 வயது இளைஞரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக USM Kubang Kerian மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது
Seorang remaja lelaki berusia 18 tahun maut dalam kemalangan selepas kereta dipandunya hilang kawalan lalu melanggar lori di Jalan Chekok Serendah, Kota Bharu. Mayat mangsa dibawa ke Hospital USM Kubang Kerian untuk bedah siasat.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



