லாரியின் பின் மோதிய மோட்டார் சைக்கிள்! முதியவர் பலி! முதாட்டி படுகாயம்!
- Thinagaren Sanggaren
- 08 Dec, 2025
டிசம்பர் 8,
லாரியின் பின்னால் மோதி மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் 60 வயது மோட்டார் சைக்கிளோட்டி சம்பவ இடத்திலேயே பலியானார். இது தொடர்பானக் காணொலி சமூகவலைத்தலங்களில் பரவியதை அடுத்து சம்மந்தப்பட்ட லாரி ஓட்டுநர் தப்பியோடியதாகவும் தவறான செய்திகள் பரவிய நிலையில் சம்மந்தப்பட்ட லாரி ஓட்டுநர் சம்பவத்தின் போது விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு உதவியதாக ஈப்போ மாவட்டக் காவல் ஆணையர் Abang Zainal Abidin தெரிவித்தார்.
இவ்விபத்து கடந்த சனிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு ஈப்போவிலிருந்து லுமூட் செல்லும் சாலையில் நிகழ்ந்ததாகவும் உயிரிழந்த மோட்டார் சைக்கிளோட்டி 60 வயது முதியவர் என்றும் மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்திருந்த 61 வயது மூதாட்டி படுகாயத்துடன் ஈப்போ HRPB பொதுமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் ஈப்போ மாவட்டக் காவல் ஆணையர் Abang Zainal Abidin தெரிவித்தார். விபத்தை ஏற்படுத்தியதாக நம்பப்படும் 23 வயது லாரி ஓட்டுநரிடம் விசாரணையை மேற்கொண்டு வருவதாகவும் ஈப்போ மாவட்டக் காவல் ஆணையர் Abang Zainal Abidin தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



