கட்டுமானத்தின் போது லாரி கவிழ்ந்ததில் ஓட்டுநர் பலி!

- Sangeetha K Loganathan
- 07 Apr, 2025
ஏப்ரல் 7,
கட்டுமானப் பகுதியில் மண்ணை அகற்றியதும் கட்டுப்பாட்டை இழந்த 10 டன் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 36 வயது ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக HULU SELANGOR மாவட்டக் காவல் துணை ஆணையர் Mohd Asri Mohd Yunus தெரிவித்தார். நேற்று பிற்பகல் 2 மணியளவில் கட்டுமானப் பகுதியிலிருந்த தொழிலாளர்களிடமிருந்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு அவர் விரைந்ததாக Mohd Asri Mohd Yunus தெரிவித்தார்.
Hulu Selangor பகுதியில் உள்ள Antara Gapi கட்டுமானப்பகுதியில் இச்சம்பவம் நிகழ்ந்ததாகவும் சம்மந்தப்பட்ட 36 வயது லாரி ஓட்டுநர் கவிழ்ந்த லாரியின் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்ததாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக HULU SELANGOR மாவட்டக் காவல் துணை ஆணையர் Mohd Asri Mohd Yunus தெரிவித்தார். சம்பவ இடத்திலிருந்த வெளிநாட்டினர்களிடம் விபத்துக் குறித்தான விசாரணையை மேற்கொண்டு வருவதாக HULU SELANGOR மாவட்டக் காவல் துணை ஆணையர் Mohd Asri Mohd Yunus தெரிவித்தார்.
Seorang pemandu lori berusia 36 tahun maut selepas lori 10 tan dipandunya terbalik di kawasan pembinaan di Antara Gapi, Hulu Selangor. Mangsa tersepit dalam lori selepas kehilangan kawalan ketika mengalihkan tanah. Siasatan sedang dijalankan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *