மக்கள் மானியங்களை நம்பி இருக்க கூடாது! RAFIZI வலியுறுத்து!

top-news
FREE WEBSITE AD

ஏப்ரல் 17,

அரசாங்கத்தின் மானியங்களை மட்டுமே நம்பி மக்கள் இருக்க கூடாது என பொருளாதார முன்னாள் அமைச்சர் Datuk Seri Rafizi Ramli மலேசிய மக்களுக்கு அறிவுருத்தினார். மக்களின் அன்றாடத் தேவைகளின் ஒரு பகுதியை அரசு மானியத்தின் மூலமாகப் பெற்றாலும் எல்லாவற்றையும் மானியத்துடன் வழங்க மலேசியாவின் பொருளாதாரம் மேற்கத்திய நாடுகளைப் போன்றது இல்லை என்பதைப் பாமர மக்கள் முதல் பொருளாதாரம் கொண்ட மக்களும் உணர வேண்டும் என Datuk Seri Rafizi Ramli தெரிவித்தார்.

BUDI MADANI RON 95 மானிய விலை எரிவாயுவைப் பிரதமர் அன்வார் அறிவித்தாலும் அது நிலைதிருக்க வேண்டும் என்றால் மக்களும் தங்களுடைய அன்றாட வாழ்வில் எரிவாயு பயன்பாட்டைக் கட்டுப்படுத்த வேண்டும் என Datuk Seri Rafizi Ramli கேட்டுக்கொண்டார். கடந்த காலங்களில் ஒரு நாளுக்கு 7 லட்சம் பீப்பாய்கள் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்த மலேசியா தற்போது 340,000 பீப்பாய்களை மட்டுமே உற்பத்தி செய்கிறது. இதற்கிடையில் கையிருப்புக்கான அளவீடுகளும் குறையாமல் பாதுகாக்க வேண்டும் என்பதால் தேவைப்படும் மக்கள் மட்டுமே மானிய விலையிலான அடிப்படை பொருள்களைப் பெற வேண்டும் என Datuk Seri Rafizi Ramli தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *