பெருந்துறை தொகுதி தேர்தல் வழக்கை நிராகரித்தது சென்னை ஐகோர்ட்டு

top-news
FREE WEBSITE AD

சென்னை, செப். 8 –

பெருந்துறை சட்டசபைத் தொகுதி தேர்தல் முடிவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை சென்னை ஐகோர்ட்டு இன்று நிராகரித்து உத்தரவிட்டுள்ளது.

கடந்த சட்டசபைத் தேர்தலில் பெருந்துறை தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ஜெயக்குமார், 9 ஆயிரத்து 693 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். பின்னர் தமிழக வெற்றிக் கழக அரசுக்கு ஆதரவாக வாக்களித்த அவர், தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார்.

இதைத்தொடர்ந்து, அதே தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட தோப்பு வெங்கடாசலம், ஜெயக்குமாரின் தேர்தல் வெற்றியை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை நிராகரிக்க வேண்டும் என்று கோரி ஜெயக்குமார் தரப்பிலும் தனியாக மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், இந்த மனு இன்று நீதிபதி டி. பரதசக்கரவர்த்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, தோப்பு வெங்கடாசலம் தாக்கல் செய்த தேர்தல் வழக்கில், தேர்தல் சட்டத்தின் கீழ் அனுமதிக்கப்பட்ட உரிய காரணங்கள் எதுவும் முன்வைக்கப்படவில்லை என்று நீதிபதி தெரிவித்தார்.

இதையடுத்து, ஜெயக்குமார் தரப்பின் மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி, தோப்பு வெங்கடாசலம் தொடர்ந்த தேர்தல் வழக்கை நிராகரித்து உத்தரவிட்டார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *