மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் – நாம் தமிழர் வேட்பாளர்கள் இன்று அறிவிக்க வாய்ப்பு
- Surendran Sumdraraj
- 11 Sep, 2026
சென்னை, செப். 11 –
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், நாம் தமிழர் கட்சி தனது வேட்பாளர்களை இன்று அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மதுராந்தகம் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் வெற்றி பெற்ற மரகதம் குமரவேலும், தாராபுரம் தொகுதியில் வெற்றி பெற்ற சத்யபாமாவும் அண்மையில் தங்கள் எம்.எல்.ஏ. பதவிகளை ராஜினாமா செய்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். இதையடுத்து இரு தொகுதிகளும் காலியானதாக அறிவிக்கப்பட்டு இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.
இந்தத் தேர்தலில் தி.மு.க. சார்பில் மதுராந்தகத்தில் பரந்தாமனும், தாராபுரத்தில் சுகன்யாவும் போட்டியிடுகின்றனர்.
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மரகதம் குமரவேல் மற்றும் சத்யபாமா மீண்டும் களமிறங்குகின்றனர். அ.தி.மு.க. சார்பில் மதுராந்தகத்தில் கணிதா சம்பத்தும், தாராபுரத்தில் பானுமதியும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், நாம் தமிழர் கட்சியும் இரு தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவிக்க உள்ளதால், நான்கு முனைப் போட்டி உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



