அன்வாருக்கு வாய் சரியில்லை! மகாதீர் காட்டம்!

- Sangeetha K Loganathan
- 26 Feb, 2025
பிப்ரவரி 26,
அன்வார் தொடர்ந்து பொய்களை மட்டுமே கட்டவிழ்த்து விடுவதாக முன்னாள் பிரதமர் மகாதீர் குற்றம்சாட்டியுள்ளார். என் பிள்ளைகளான Mirzan Mahathir, Mokhzani Mahathir சட்டவிரோதமாகச் சொத்துகளைக் குவித்துள்ளதாக அன்வார் தெரிவித்தார், ஆனால் லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையமான SPRM விசாரணையில் அப்படி எந்தவொரு சொத்து குவிப்பும் இல்லை என உறுதிச் செய்யப்பட்டுள்ளது. அன்வாரின் கட்டளையில் இயங்கும் SPRM விசாரணையில் என் பிள்ளைகளின் சொத்து மதிப்பு RM 436 மில்லியன் என கணக்கிடப்பட்டுள்ள நிலையில் அன்வார் மேடை ஏறினாலே முன்னாள் பிரதமரின் பிள்ளைகளின் சொத்து மதிப்பு RM 1.2 பில்லியன் என்றும் வெளிநாடுகளில் சொத்துகளைக் குவித்துள்ளதாகவும் பொய் பொய்யாகக் கட்டவிழ்த்து விடுகிறார்.
என் பிள்ளைகள் அரசாங்கப் பணத்தைப் பயன்படுத்தியதாக எந்தவோர் ஆதாரமும் இல்லை என்றாலும் மேடை ஏறினாலே அன்வாரின் வசைப் பேச்சுகள் என்னையும் என் பிள்ளைகளையும் நோக்கியே இருப்பதாகவும் அன்வாருக்கு வாய் சரியில்லை என்றும் மகாதீர் காட்டமாகப் பதிவிட்டுள்ளார்.
Tun Dr. Mahathir menuduh Perdana Menteri Anwar Ibrahim menyebarkan pembohongan mengenai kekayaan anak-anaknya. Beliau menegaskan bahawa SPRM tidak menemui bukti pengumpulan harta secara haram walaupun Anwar mendakwa sebaliknya dalam ucapannya.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *