மகாதீர் கேவலமானவர்! பாப்பராய்டு அதிருப்தி!

top-news
FREE WEBSITE AD

ஜூலை 2,

முன்னாள் பிரதமர் TUN MAHATHIR நாட்டின் பல்லினச் சமூகத்தின் ஒற்றுமைக்கு எதிராக மிகவும் கேவலமாகப் பேசிவருவதால் அவர் துன் என்கிற மகத்தான பட்டத்திற்குத் தகுதியானவரா என சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் V. PAPPARAIDU கேள்வி எழுப்பியுள்ளார். ம.இ.கா, ம.சீ.ச போன்ற பல்லினச் சமூகத்தின் கட்சிகளின் ஆதரவுடன் மலேசியாவை 22 ஆண்டுகள் தொடர்ச்சியாக நாட்டின் பிரதமராகப் பொறுப்பில் இருந்த மகாதீர் பிற சமூக மக்களைப் புறக்கணிக்கும் வகையில் பொதுவில் கருத்து தெரிவித்திருப்பது கேவலமானது என V. PAPPARAIDU அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். 

முன்னதாகத் தேர்தலில் மலாய் வாக்காளர்கள் மலாய் வேட்பாளர்களுக்கு மட்டுமே வாக்களிக்க வேண்டும் என மகாதீரின் சமூக வலைத்தலத்தின் மூலமாக மகாதீர் கோரிக்கை  விடுத்துள்ளார். குறிப்பாகத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் எந்த கட்சியைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் அதைக் பொருட்படுத்தாமல், மலாய் வேட்பாளர்களுக்கு மட்டுமே மலாய்க்காரர்களின் வாக்குகள் கிடைக்க வேண்டும் என மகாதீர் குறிப்பிட்டிருக்கிறார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *