இஸ்லாமிய அமைப்புகளுடன் இந்துகளைப் பிரதிநிதித்து Mahima பேச்சுவார்த்தை!

top-news
FREE WEBSITE AD

மார்ச் 19,

கோயில் விவகாரங்களைச் சுமூகமாகத் தீர்க்க வேண்டும் என்பதற்காக இஸ்லாமிய அமைப்புகளுடன் மலேசிய இந்து கோயிகள் ஒருங்கிணைப்புக் குழு எனப்படும் மஹிமா பேச்சுவார்த்தையை நடத்தியுள்ளது. இந்த சந்திப்பில் மலேசிய இஸ்லாமிய வழக்கறிஞர் மன்றத்தின் தலைவர்  Datuk Zainul Rijal Abu Bakar உடன் ரவாங் கோயில் உடைப்பில் தொடர்புடைய YAYASAN KUBRA அமைப்பினர்களும் பங்கேற்றதுடன் இந்து கோயில்கள் ஒருங்கிணைப்புக் குழு எனப்படும் மஹிமாவின் தலைவர் Datuk Sivakumar Tan Sri Nadarajah ஆகியோர் பங்கேற்றனர். இவர்களுடன் சர்ச்சைக்குரிய மத போதகரான FIRDAUS WONG, இந்துகளை இழிவாகப் பேசியதற்காகக் கைது செய்யப்பட்ட ZAMRI VINOTH ஆகியோரும் இந்த கூட்டத்தில் பங்கேற்றதாக FIRDAUS WONG தெரிவித்துள்ளார்.

கோயில்கள் தொடர்பாகச் சம்மந்தப்பட்ட இரு இனங்களின் பிரதிநிதிகள் பேசி நல்ல தீர்வை எதிர்நோக்குவதற்காக இந்த சந்திப்பு நடைபெற்றதாக மலேசிய இஸ்லாமிய வழக்கறிஞர் மன்றத்தின் தலைவர்  Datuk Zainul Rijal Abu Bakar தெரிவித்தார். மூன்றாம் தரப்பினர்களோ தனிநபர்களோ இந்த கோயில் விவகாரங்களைப் பற்றிய கருத்துகளை வெளியிடுவதால் எந்தவொரு பயனும் இல்லை என மலேசிய இஸ்லாமிய வழக்கறிஞர் மன்றத்தின் தலைவர்  Datuk Zainul Rijal Abu Bakar வலியுறுத்தினார்.

இது தொடர்பாக நாங்கள் வாய்மொழி பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டதாகவும் அனுமதியின்றி கட்டப்படும் வழிபாட்டுத் தலங்கள் கட்டப்படுவது குறித்தும் மஹிமா முக்கிய செயல்பாடுகளை மேற்கொள்ளும் என இந்து கோயில்கள் ஒருங்கிணைப்புக் குழு எனப்படும் மஹிமாவின் தலைவர் Datuk Sivakumar Tan Sri Nadarajah தெரிவித்தார்.

 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *