தேசிய பேரிடர் மேலாண்மை மன்றம் அமைக்கப்படும் – அகமட் ஜாஹிட் ஹமிடி
- Tamil Malar (Reporter)
- 08 Jan, 2026
பூச்சோங், ஜன.8-
பேரிடர் மேலாண்மை, பேரிடர் இடர் குறைப்பை ஒருங்கிணைப்பதற்கு பொறுப்பான உயரிய அமைப்பாக தேசிய பேரிடர் மேலாண்மை மன்றம் (Majlis Pengurusan Bencana Negara) அமைக்கப்பட வேண்டும் என்று துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ டாக்டர் அகமட் ஜாஹிட் ஹமிடி தெரிவித்தார்.
தேசிய பேரிடர் மேலாண்மை குழுத் தலைவரான அவர், இதற்காக தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனத்திற்கு அமைச்சரவைக் குறிப்பு (Kertas Kabinet) தயாரிக்க உத்தரவிட்டுள்ளதாகக் கூறினார். இக்குறிப்பு அனைத்து அமைச்சகங்களுக்கும் விநியோகிக்கப்பட்டு கருத்துகள் பெறப்படும்.
“ஒரு மாத காலத்துக்குள் அனைத்து அமைச்சகங்களுக்கும் விநியோகித்து கருத்துகளைப் பெறுங்கள். நானே அமைச்சரவைக் கூட்டத்தில் அதை முன்வைப்பேன்.
“மத்திய பேரிடர் மேலாண்மை குழுவை தேசிய பேரிடர் மேலாண்மை மன்றமாக உயர்த்த வேண்டும். பேரிடர் மேலாண்மையை உண்மையாகவே மேம்படுத்த விரும்புகிறோம்,” என்று அவர் கூறினார்.
NADMA ஊழியர்களுக்கு 2026 புத்தாண்டு அறிக்கை வழங்கும் நிகழ்ச்சியில் அவர் அவ்வாறு உரையாற்றினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



