காசா விவகாரம் - “மலேசியா அமைதியாக இருக்காது” - அமிருடின் ஷாரி எச்சரிக்கை

top-news

சிப்பாங், மே 25-

காசா மக்களுக்கு உதவிசெய்ய சென்ற Global Sumud Flotilla (GSF) 2.0 மனிதாபிமான குழுவினர் உளவியல் அழுத்தம், மிரட்டல் மற்றும் உடல் தாக்குதல்களுக்கு உள்ளானதாக கூறப்படும் சம்பவம் குறித்து மலேசியா அமைதியாக இருக்காது என்று குழுத் தலைவர் Datuk Seri Amirudin Shari தெரிவித்துள்ளார்.

சிப்பாங் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சர்வதேச சட்ட மீறல்கள் தொடர்பான ஆதாரங்கள் மற்றும் ஆவணங்களை சிறப்புக் குழு தற்போது சேகரித்து வருவதாகக் கூறினார். இந்த விவகாரம் சர்வதேச நீதிமன்றத்தில் எடுத்துச் செல்லப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

“இந்த மனிதாபிமான பயணத்தில் பங்கேற்ற குழுவினருக்கு எதிராக உடல் ரீதியான தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இது மிகவும் கடுமையான விஷயம். எனவே இதை உலக அரங்கில் எடுத்துச் செல்ல மலேசியா நடவடிக்கை மேற்கொள்ளும்,” என்று அமிருடின் ஷாரி கூறினார்.

மேலும், பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக மலேசியா தொடர்ந்து தூதரக அழுத்தங்களை அதிகரிக்கும் என்றும், நாடு முழுவதும் காசா தொடர்பான விழிப்புணர்வு மற்றும் ஒற்றுமை பிரச்சாரங்கள் தீவிரப்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.


https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தேடல்

செய்தி வகை

குறிச்சொற்கள்

சமூக இணைப்புகள்