மலேசியா–சீனா உறவை வலுப்படுத்த உறுதி: பிரதமர் அன்வார் இப்ராஹிம்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், மார்ச் 26-

எதிர்கால சவால்களை முன்னிட்டு, மலேசியா மற்றும் சீனா நாடுகள் தங்களது இருதரப்பு உறவுகளையும் பாதுகாப்பு ஒத்துழைப்பையும் மேலும் வலுப்படுத்த உறுதியடைந்துள்ளதாக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

சீனாவின் உள்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் சென் யிக்சின் மலேசியாவிற்கு மேற்கொண்டுள்ள அதிகாரப்பூர்வ வருகையை முன்னிட்டு நடைபெற்ற சந்திப்பில் இந்த விடயங்கள் விவாதிக்கப்பட்டதாக அவர் கூறினார். இச்சந்திப்பு, இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்தும் முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.

மேலும், சமூக மற்றும் பொருளாதார துறைகளில் இரு நாடுகளும் பெற்றுள்ள வளர்ச்சியும் செழிப்பும் தொடர்ந்து மக்களால் அனுபவிக்கப்படுவதை உறுதிசெய்ய இரு தரப்பும் ஒப்புக்கொண்டதாகப் பிரதமர் குறிப்பிட்டார்.

இரு நாடுகளுக்கிடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பாகவும், தற்போதைய உலக அரசியல் சூழ்நிலை மற்றும் நிலவும் புவியியல் அரசியல் சவால்கள் குறித்தும் கலந்துரையாடல்கள் நடைபெற்றன.

இந்த சந்திப்பு, மலேசியா–சீனா உறவைப் புதிய உயரத்திற்குக் கொண்டு செல்லும் முக்கிய கட்டமாக பார்க்கப்படுவதுடன், எதிர்காலத்தில் பல துறைகளில் கூடுதல் ஒத்துழைப்புக்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *