இந்தியர்களை ஏமாற்றிய பக்கத்தான் & பாரிசான்! RAFIZI சாடல்!
- THINAGAREN SANGGAREN
- 25 Jun, 2026
ஜூன் 25,
மலேசிய இந்திய சமூகத்தைப் பாரிசான் கடந்த காலங்களில் ஏமாற்றியது போலவே இப்போது பக்காத்தானும் ஏமாற்றி வருகிறது என பெர்சாமா கட்சியின் தலைவர் DATUK SERI RAFIZI RAMLI தெரிவித்தார். இந்திய சமூகத்தைப் பொறுத்தவரையில் எத்தனை சிறப்புத் திட்டங்கள், எத்தனை அமைச்சர்கள் என்பது மட்டுமே இந்தியர்களின் பிரச்சனையாக நாம் கருத முடியாது. வாழ்வாதாரச் சிக்கலை எதிர்நோக்கும் இந்தியர்களுக்கு நியமிக்கப்பட்ட இந்தியச் சமூகத் தலைவர்களை அணுகவே முடியாத போது எப்படி இந்தியர்களின் பிரச்சனைகள் தீர்வு காணப்படும் என DATUK SERI RAFIZI RAMLI கேள்வி எழுப்பினார்.
பெரும்பாலான இந்தியர்களுக்கு எப்படி அரசு உதவித் திட்டங்களுக்கு விண்ணப்பிப்பது என்று கூட தெரியாத சூழல் இங்கே இருக்கிறது. குறிப்பிட்ட ஒரு சமூகம் மட்டுமே நாட்டில் உள்ள எல்லா அரசியல் கட்சிகளாலும் ஏமாற்றப்பட்டு வருகிறது. பதவிகள் கொடுத்தால் அந்த பதவியைக் கொண்டு இந்தியர்களுக்கு நன்மையான காரியங்களைச் செய்வார்கள் என எதிர்பார்க்கிறோம் என இப்போதைய அரசாங்கமும் அப்போதைய அரசாங்கமும் நினைத்துக் கொண்டிருக்கிறது. எல்லா அமைச்சர்களும் எல்லா சமூகத்திற்குத் தேவையானதையும் செய்ய வேண்டும். இந்தியர்களின் நலனைப் பாதுகாப்பதும் ஒரு மலாய்க்காரரான எனது கடமைகளில் ஒன்று என எல்லா மலாய் அரசியல்வாதிகளும் சீன அரசியல்வாதிகளும் உணர வேண்டும் என DATUK SERI RAFIZI RAMLI வலியுறுத்தினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



