மலேசிய எல்லைகளில் பாதுகாப்பை உறுதிப்படுத்த உள்துறை அமைச்சு நடவடிக்கை!

top-news
FREE WEBSITE AD

ஏப்ரல் 13,

மலேசியா தாய்லாந்து எல்லை பகுதிகளில் பாதுகாப்புகள் முறையாக இருப்பதாக உள்துறை அமைச்சர் Saifuddin Nasution Ismail தெரிவித்தார். நேற்று மலேசியா தாய்லாந்து எல்லை பாதுகாப்பு முகமையைப் பார்வையிட்ட Saifuddin Nasution Ismail இது ஒரு வழக்கமான சோதனை நடவடிக்கை என்றாலும் வெளிநாட்டுப் பொருள்கள் அதிகமாக மலேசியாவுக்குள் கடத்தும் ஒரு தளமாகத் தாய்லாந்து மலேசியா எல்லை பகுதிகள் பயன்படுத்தப்படுவதால் எல்லை பகுதிகளில் பாதுகாப்புப் பணிகளை மேம்படுத்த உள்துறை அமைச்சு நடவடிக்கையை மேற்கொள்ளும் என அவர் தெரிவித்தார். 

Durian Burung, Bukit Kayu Hitam, Padang Besar ஆகிய பகுதிகளை நேரில் பார்வையிட்டதாகவும் சந்தேகத்திற்கிடமான பகுதிகளையும் ஆய்வு செய்ததாகவும் பறிமுதல் செய்யப்பட்ட கடத்தல் பொருள்களையும் பார்வையிட்டதுடன் அதனை சேதனையிட்டு அதன் பயன்பாடுகள் குறித்து விவாதித்ததாகவும் உள்துறை அமைச்சர் Saifuddin Nasution தெரிவித்தார். தற்போது எரிவாயு தட்டுபாடுகள் இருந்தாலும் அரசு கையிருப்பில் எரிவாயு போதுமான் அளவு இருப்பதாகவும் எரிவாயு கடத்தல்களைத் தடுக்க எல்லைகளில் பாதுகாப்பை மேம்படுத்தப்பட்டிருப்பதாகவும் உள்துறை அமைச்சர் Saifuddin Nasution தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *