அனைத்துலக சமையல் போட்டியில் மலேசிய இந்தியர் செஃப் யுவன் சாதனை
- Surendran Sumdraraj
- 03 Jun, 2026
தாய்லாந்து, ஜூன் 3-
தாய்லாந்தின் பாங்காக்கில் நடைபெற்ற Thailand Ultimate Chef Challenge 2026 சர்வதேச சமையல் போட்டியில் மலேசியாவை பிரதிநிதித்துவப்படுத்திய செஃப் யுவன், செஃப் ஷஃபிக் மற்றும் செஃப் லியோ ஆகியோருடன் இணைந்து Champion Cup வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்.
இந்தச் சர்வதேச போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை வழங்கி, முழுமையான ஆதரவும் ஊக்கமும் அளித்த Lotus’s Malaysia நிறுவனத்திற்கும் செஃப் யுவன் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி, தனிநபர் பிரிவுகளிலும் சிறப்பாகப் பங்கேற்ற செஃப் யுவன், மேலும் இரண்டு வெண்கலப் பதக்கங்களை (Bronze Medals) வென்று தனது திறமையை சர்வதேச அரங்கில் மீண்டும் நிரூபித்துள்ளார்.
போட்டிக்குப் பிறகு பேசிய செஃப் யுவன், இந்திய இளைஞர்கள் அதிக அளவில் சமையல் மற்றும் விருந்தோம்பல் துறையில் இணைவதன் அவசியத்தை வலியுறுத்தினார். “சமையல் துறை என்பது ஒரு வேலை மட்டுமல்ல; அது ஒரு சிறந்த தொழில் வாய்ப்பு. ஹோட்டல்கள், கப்பல் சுற்றுலா (Cruise), விமான சேவைகள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் உள்ளிட்ட பல துறைகளில் முன்னேறும் வாய்ப்புகளை இது வழங்குகிறது. இந்திய இளைஞர்கள் இந்தத் துறையில் அதிகமாக ஈடுபட்டால், தனிநபர் முன்னேற்றத்தையும் பொருளாதார சுதந்திரத்தையும் அடைய முடியும்.” மேலும், சமையல் மற்றும் விருந்தோம்பல் துறையில் ஆர்வமுள்ள இந்திய இளைஞர்கள் தொழில் வழிகாட்டல், கல்வி வாய்ப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான மேலதிக தகவல்களுக்கு நேரடியாக செஃப் யுவனை தொடர்புகொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேபோல், உணவக உரிமையாளர்கள் மற்றும் தொழில்முனைவோர்கள் தங்களது வணிக வளர்ச்சி, மெனு மேம்பாடு, சமையலறை செயல்திறன், பணியாளர் பயிற்சி மற்றும் உணவக மேலாண்மை தொடர்பான ஆலோசனைகளுக்காகவும் செஃப் யுவனை அணுகலாம் என அவர் கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



