நடிகர் அக்சய் குமார் மகளுக்குப் பாலியல் தொல்லை – குற்றவாளி கைது
- Surendran Sumdraraj
- 26 Apr, 2026
மும்பை, ஏப். 26-
பாலிவுட் நடிகர் அக்சய் குமார் மகளுக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லை சம்பவத்தில் முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய ஒருவரை மகாராஷ்டிரா சைபர் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் முதலில் கடந்த ஆண்டு வெளிச்சத்துக்கு வந்தது. அக்சய் குமார் தனது மகள் ஆன்லைன் விளையாட்டு விளையாடிக் கொண்டிருந்தபோது அறிமுகமில்லாத நபர் ஒருவர் தவறான மற்றும் அசிங்கமான தகவல்களை அனுப்பியதாக தெரிவித்துள்ளார். அந்த நபர் அவரது மகளிடம் தனிப்பட்ட தகவல்களையும், அசிங்கமான புகைப்படங்களையும் கேட்டு தொந்தரவு செய்ததாகக் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து உடனடியாக குடும்பத்தினரிடம் தெரிவித்த அவரது மகள், பெரிய பிரச்சினை ஏற்படாமல் தப்பித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து நடந்த விசாரணையில் குற்றவாளியை அடையாளம் கண்டு கைது செய்துள்ளதாகப் போலீசார் தெரிவித்துள்ளனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



