நியூகாஸ்டலை வீழ்த்தி லீக் கப் இறுதி போட்டியில் சிட்டி
- Tamil Malar (Reporter)
- 05 Feb, 2026
இங்கிலாந்து, பிப். 5-
லீக் கப் அரையிறுதியில் நடப்பு சாம்பியன் நியூகாஸ்டலை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய மான்செஸ்டர் சிட்டி, இறுதிப்போட்டியில் அர்செனலை சந்திக்கிறது.
பெப் குவார்டியோலா தலைமையிலான மான்செஸ்டர் சிட்டி, கடந்த மாதம் டைன்சைடில் நடைபெற்ற முதல் அரையிறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்றிருந்த நிலையில், இம்முறை எதிஹாட் மைதானத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இறுதிப்போட்டிக்கான இடத்தை உறுதி செய்தது.
ஆட்டத்தின் முதல் பாதியிலேயே ஓமர் மார்மூஷ் இரண்டு கோல்களை அடித்து அணிக்கு வலுவான முன்னிலை அளித்தார். இதற்கிடையில், டிஜானி ரெய்ஜண்டர்ஸ் ஒரு கோலை பதிவு செய்தார்.
இடைவேளைக்குப் பிறகு, நியூகாஸ்டலின் ஆன்தனி எலாங்கா ஒரு கோலை அடித்து வித்தியாசத்தைக் குறைத்தார். இருப்பினும், மொத்தமாக 5-1 என்ற அகரிகேட் (aggregate) வெற்றி சிட்டியை 2021க்குப் பிறகு முதன்முறையாக லீக் கப் இறுதிப்போட்டிக்கு கொண்டு சென்றது.
இப்போது சிட்டி மற்றும் அர்செனல் இடையேயான இறுதிப்போட்டி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



