ஜொகூர் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் PH தேர்தல் அறிக்கை விரைவில் வெளியீடு

top-news
FREE WEBSITE AD

ஜொகூர் பாரு, ஜூன் 30 –

ஜொகூர் மாநிலத் தேர்தலை முன்னிட்டு பக்காத்தான் ஹாராப்பான் (PH) தேர்தல் அறிக்கை விரைவில் வெளியிடப்படவுள்ளது. இந்த அறிக்கை ஜொகூர் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையிலும், இளைஞர் நலனையும் உள்ளடக்கும் வகையிலும் தயாரிக்கப்பட்டுள்ளது.

பி.கே.ஆர் பொதுச்செயலாளர் டத்தோ டாக்டர் ஃபுசியா சாலே கூறுகையில், ஜோகூர் மாநிலத் தேர்தலுக்கான PH தேர்தல் அறிக்கை ஏற்கனவே இறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

“இன்னும் ஒரு அல்லது இரண்டு நாளில் வெளியிடப்படும். இறுதி செய்யப்பட்டுவிட்டது. இந்தத் தேர்தல் அறிக்கை ஜொகூர் மக்களின் விருப்பங்களையும், இளைஞர் நலனையும் கவனத்தில் கொண்டதாக இருக்கும்,” என்று அவர் கூறினார்.

ஸ்கூடாயில் உள்ள SDS Food Manufacturing Sdn Bhd தொழிற்சாலைக்குப் பணிப்பயணம் மேற்கொண்ட பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தேர்தல் அறிக்கை PH தலைவர் மற்றும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவித்தார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *