பக்காத்தானின் ஜோகூர் மாநிலத் தேர்தல் வாக்குறுதிகள் வெளியீடு!
- Surendran Sumdraraj
- 03 Jul, 2026
ஸ்கூடாய், ஜூலை 3-
ஜொகூர் மாநிலத் தேர்தலை முன்னிட்டு பக்காத்தான் ஹரப்பான் கூட்டணி 10 அம்சங்களை அடங்கிய
தேர்தல் வாக்குறுதிகளை இன்று காலை ஜொகூர் பாருவில் அமைந்திருக்கும் NEW YORK தங்கும் விடுதியில் வெளியீடு
செய்தது.
இந்நிகழ்ச்சிக்கு சிலாங்கூர் மாநில மந்திரி பெசாரும், பி.கே.ஆர் உதவித் தலைவருமான டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி, ஜொகூர் மாநில அமானா கட்சித் தலைவர் காலிட் சாமாட், அமைச்சரும்
பி.கே.ஆர் உதவித் தலைவருமான சாங் லீ கான், ஜொகூர் மாநில டி.ஏ.பி தலைவரும் துணையமைச்சருமான
தியோ நீ சிங், பி.கே.ஆர் கட்சியின் பொதுச் செயலாளரும்
துணை அமைச்சருமான புசியா சாலே, ஜொகூர் மாநிலப் பி.கே.ஆர் கட்சியின் தலைவர்
DATUK SERI ZALIHA
MUSTAFA உட்பட பக்காத்தான் ஹராப்பானின் 56 சட்டமன்ற வேட்பாளர்களும், பக்காத்தான் ஆதரவாளர்களும் பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர்.
ஜொகூர் மாநிலம் ஒரு முழுமைபெற்ற, அனைத்து
துறைகளிலும் வளர்ச்சி அடைந்த மாநிலமாக உருமாற்றம் பெற பக்காத்தான் ஹரப்பானுக்கு
வாக்களித்து, ஜொகூரின் சிறந்த ஆட்சியை அமைக்க மக்கள்
வாய்ப்பளிக்க வேண்டுமென தேர்தல் வாக்குறுதிகளை அதிகாரப்பூர்வமாக வெளியீடு செய்த சிலாங்கூர்
மாநில மந்திரி பெசாரும், பி.கே.ஆர் உதவித் தலைவருமான டத்தோ ஸ்ரீ
அமிருடின் ஷாரி, ஜொகூர் மாநில அமானா கட்சித் தலைவர்
காலிட் சாமாட், அமைச்சரும் பி.கே.ஆர் உதவித் தலைவருமான சாங் லீ கான், ஜொகூர் மாநில டி.ஏ.பி தலைவரும் துணையமைச்சருமான தியோ நீ சிங், பி.கே.ஆர்
கட்சியின் பொதுச் செயலாளரும் துணை அமைச்சருமான புசியா சாலே, ஜொகூர்
மாநிலப் பி.கே.ஆர் கட்சியின் தலைவர் DATUK SERI ZALIHA MUSTAFA ஆகியோர் கேட்டுக்கொண்டனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



