10,000 உறுப்பினர்களைக் கொண்டிருக்கும் தமிழ் இளைஞர் மணிமன்றம்! - தேசியத் தலைவர் முருகன்!

top-news
FREE WEBSITE AD


பிப்ரவரி 23,

மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றப் பேரவை மலேசியா முழுவதும் 10,000 உறுப்பினர்களைக் கொண்டு இயங்கும் பேரியக்கம் என்பதை அதன் தேசியத் தலைவர் முருகன் மணியம் வலியுறுத்தினார். 

இளைஞர் அமைப்புகளின் அங்கீகரத்தைப் பெற்றிருக்கும் தமிழ் இளைஞர் மணிமன்றம் தொடர்ந்து அதன் உறுப்பினர்களைத் தக்க வைக்கும் என்பதையும் அதற்கானப் பல்வேறு செயல்பாடுகளை மாவட்ட அளவிலும் தேசிய அளவிலும் செயல்படுத்திக் கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். 

புதிய உறுப்பினர்களை முறையாக வழிநடத்தி உறுப்பினர்களாக இணைத்து வரும் நிலையில் வெற்றுக் கணக்குகாக நாம் எண்ணிக்கையைக் காட்டுவதில் எந்த பயனும் இல்லை என்பதையும் அவர் வலியுறுத்தினார். 10,000 உறுப்பினர்கள் என்பது முறையாகப் பதிவு செய்யப்பட்ட எண்ணிக்கை என்பதையும் மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றப் பேரவையின் தேசியத் தலைவர் முருகன் மணியம் தெரிவித்தார்.  

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *