பாச்சோக்கில் OKU ஆடவர் கொலை! – போலிஸ் விசாரணை
- Shan Siva
- 15 Apr, 2026
கோலாலம்பூர், ஏப் 15: கிளந்தான், பாச்சோக் பகுதியில் தலையில் பலத்த காயங்களுடன் கண்டெடுக்கப்பட்ட, அறிவுசார் குறைபாடுள்ள ஒருவர்,17 மணி நேரத்திற்கும் மேலாக உயிருக்காகப் போராடி உயிரிழந்தார்.
20 வயதான ஜாகிர் ஃபிக்ரி
ஜைனல், என்ற அந்த நபர் நேற்று
காலை 7.30 மணியளவில் படாங்
லட்டியில் உள்ள லாடாங் மெர்டேக்கா செர்பு பகுதியில், முகம் குப்புறக் கிடந்த நிலையில், ரத்தவெள்ளத்தில் கிடந்ததாக கோஸ்மோ செய்தி வெளியிட்டுள்ளது.
அவர்
தாக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. அப்பகுதியைச் சேர்ந்த 60 வயதான யூசோஃப் ஷாஃபி, ஹோண்டா C70 மோட்டார் சைக்கிள் அருகே
ஒருவர் கிடப்பதாகத் தனது நண்பரிடமிருந்து அழைப்பு வந்ததாகக் கூறினார்.
சம்பவ இடத்திற்கு வந்த
யூசோஃப், ஜாகிர் வலியால்
முனகிக்கொண்டிருப்பதைக் கண்டதாகவும், உடனடியாக அவசர சேவைகளைத் தொடர்பு கொண்டதாகவும் கூறினார்.
ஜாகிர், குபாங் கெரியானில் உள்ள மலேசிய அறிவியல்
பல்கலைக்கழகத்தின் சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இன்று அதிகாலை 12.45 மணியளவில் அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
ஜாகிரின் உடல் கோத்தா
பாருவில் உள்ள ராஜா பெரெம்புவான் ஜைனாப் II மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளதாக
பாச்சோக் காவல்துறைத்
தலைவர் இஸ்மாயில் ஜமாலுதீன் தெரிவித்தார்.
கொலை வழக்காக இச்சம்பவம் விசாரிக்கப்பட்டு வருகிறது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



