சட்டவிரோதமாக வெளியேற முயற்சித்த 32. வெளிநாட்டினர் கைது!

top-news
FREE WEBSITE AD

ஜனவரி 18,

மலேசியாவிலிருந்து சட்டவிரோதமாக வெளியேற முயற்சித்த 32 வெளிநாட்டினர்களைத் தேசிய கடல்சார் பாதுகாப்பு ஆணையம் கைது செய்தது. நேற்று அதிகாலை 4.15 மணியளவில் பதிவு எண் இல்லாத மீன் பிடி படகு கோலா சிலங்கூர் கடல் வழியாக மலேசியாவை விட்டு வெளியேறுவதைக் கண்காணித்த maritime அதிகாரிகள் படகைச் சேதனையிட்ட போது 9 பெண்களும் 23 ஆண்களும் படகின் கீழ் தளத்தில் மறைந்திருப்பதைக் கண்டறிந்ததாகச் சிலாங்கூர் மாநிலக் கடல்சார் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது. 

சம்மந்தப்பட்ட படகில் இருந்த வெளிநாட்டினர்கள் மலேசியாவிலிருந்து சட்டவிரோதமாக வெளியேற முயற்சித்ததாகவும் அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதற்கான எந்தவோர் ஆவணங்களையும் அவர்கள் கொண்டிருக்கவில்லை என்றும் தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்ட அனைவரும் 20 முதல் 60 வயதுக்குற்பட்டவர்கள் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. படகில் இருந்த 23 வெளிநாட்டினர்களும் 2 மலேசியர்களும் விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *