பள்ளத்தில் கார் கவிழ்ந்து கல்யாண ஜோடி பரிதாப பலி!
- Shan Siva
- 06 Dec, 2025
கோலாலம்பூர், டிச 6: டிசம்பர் 25 ஆம் தேதி திருமணம் செய்யத் திட்டமிட்டிருந்த தம்பதியினர், குவா முசாங் நோக்கிச் சென்றபோது, 200 அடி ஆழமுள்ள பள்ளத்தில் அவர்களது கார் கவிழ்ந்து பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த ஜோடி, லெபிர் தொடக்கப்பள்ளியின் ஆசிரியரான, கிளந்தான், மேலோர், கம்போங் மெனாண்டியைச் சேர்ந்த 52 வயதான ஹசன் ஷசாலி மற்றும் அதே பள்ளியில் கேண்டீன் ஊழியரான, கிளந்தான், குவா முசாங்கைச் சேர்ந்த 34 வயதான சுசைமா சே அசிஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று ஹூலு தெரெங்கானு மாவட்ட காவல்துறைத் தலைவர் ஷாருதீன் அப்துல் வஹாப் கூறினார்.
முதற்கட்ட விசாரணைகளின் அடிப்படையில், உலு தெரெங்கானுவிலிருந்து குவா முசாங் நோக்கிச் சென்றவர்கள், நிலச்சரிவு காரணமாக மூடப்பட்டிருந்த சாலையில் நுழைந்தபோது, வாகனம் சறுக்கி பள்ளத்தில் விழுந்ததால் விபத்து ஏற்பட்டதாக நம்பப்படுகிறது.
மோதலில் பாதிக்கப்பட்ட இருவரும் வாகனத்திலிருந்து வெளியே தூக்கி வீசப்பட்டனர், மேலும் அவர்கள் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டதுஎன்று அவர் பெர்னாமாவிடம் தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



