மசாஜ் நிலையத்தில் பணம் கேட்டவர்களுக்கு எதிராக வழக்கு பதிவு!
- THINAGAREN SANGGAREN
- 28 Mar, 2026
மார்ச் 28,
மசாஜ் நிலையத்தில் இரு ஆடவர்கள் பணம் கேட்கும்படியானக் காணொலி சமூகவலைத்தலங்களில் பரவிய காணொலி தொடர்பாகக் காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளதாகக் கோலாலம்பூர் காவல்துறை தலைவர் Datuk Fadil Marsus தெரிவித்தார். இதுவரையில் சம்மந்தப்பட்ட காணொலி தொடர்பாக 3 வெவ்வேறு புகார்கள் பெறப்பட்டுள்ளதாகவும் காணொலியில் உள்ள இருவரையும் காவல்துறை அடையாள கண்டிருப்பதாகவும் Datuk Fadil Marsus தெரிவித்தார்.
சம்மந்தப்பட்ட காணொலி Wangsa Majuவில் உள்ள ஒரு மசாஜ் நிலையம் என்பதால் சம்மந்தப்பட்ட மசாஜ் நிலையத்தில் காவல்துறை விசாரணை நடத்தி வருவதாகவும் Datuk Fadil Marsus தெரிவித்தார். கோலாலம்பூர் மாகாணத்தின் சிறப்பு அதிகாரி என அடையாளப்படுத்திக் கொண்ட இருவரும் பொதுமக்களிடமிருந்து எந்தவொரு அச்சுறுத்தலும் ஏற்படாமல் இருக்க சம்மந்தப்பட்ட மசாஜ் நிலையத்திற்குப் பாதுகாப்பு வழங்குவதாகவும் தெரிவித்து பணம் கேட்டதாக அந்த காணொலி பதிவாகியுள்ளது.
சம்மந்தப்பட்ட இருவரும் எந்த கட்சியைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூட்டரசு வளாக அமைச்சர் HANNAH YEO வலியுறுத்திய நிலையில் தற்போது அவர்கள் இருவரும் கோலாலம்பூர் MPP எனப்படும் மக்கள் பிரதிநிதிச் சபையைச் சேர்ந்த R Vijeyndran, G Paarthiydasan என கோலாலம்பூர் மாநகர மன்றத்தின் மக்கள் நலப்பிரிவு தலைவர் Datuk Azman Haji Abidin தெரிவித்துள்ளார். அவர்கள் இருவரும் சமம்ந்தப்பட்ட பொறுப்பிலிருந்து முழுமையாக நீக்கப்பட்டிருப்பதாகவும் அவர்கள் இருவர் மீது காவல்துறையும் லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பி.கே.ஆரின் கோலாலம்பூர் மாகாணத் தலைவருமான Datuk Azman Haji Abidin தெரிவித்தார்
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



