பியோரென்டினாவை 3-0 என கோல் கணக்கில் வீழ்த்திய கிரிஸ்டல் பாலஸ்

top-news
FREE WEBSITE AD

லண்டன், ஏப். 10-

Crystal Palace அணி, Fiorentina அணியை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தி UEFA கான்பரன்ஸ் லீக் காலிறுதி முதல் சுற்றில் முன்னிலை பெற்றது.

இந்தப் போட்டியில், பிரெஞ்சு வீரர் Jean-Philippe Mateta வெற்றிக்கான முக்கிய காரணமாக திகழ்ந்தார். ஜனவரி மாதத்தில் AC Milan அணிக்கு மாற்றம் நடைபெறாத நிலையில், மீண்டும் கிரிஸ்டல் பாலஸ் அணியின் முதல் அணியில் இடம்பிடித்த அவர், 24ஆவது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பை கோலாக மாற்றினார். இந்த பெனால்டி, Evann Guessand மீது Dodo செய்த தவறின் காரணமாக வழங்கப்பட்டது.

மட்டேட்டா, இரண்டாவது கோலிலும் முக்கிய பங்காற்றினார். அவரின் அருகிலிருந்து எடுத்த ஷாட்டை David de Gea தடுத்தாலும், பின்னர் Tyrick Mitchell அதனை கோலாக மாற்றினார்.

“நான் தொடர்ந்து கடுமையாக உழைத்து, அணிக்கு வெற்றி பெற உதவ முயற்சிக்கிறேன்,” என்று மட்டேட்டா TNT Sports-க்கு தெரிவித்தார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *