மத்திய கிழக்கு மோதல் தாக்கம் – புதிய ஏற்றுமதி சந்தைகளை ஆராய்கிறது MATRADE
- Surendran Sumdraraj
- 15 Mar, 2026
கெபாலா பாத்தாஸ், மார்ச் 15-
மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம் மற்றும் போர் சூழ்நிலையால் மலேசியாவின் வர்த்தக செயல்திறனுக்கு ஏற்படும் தாக்கத்தைக் குறைக்கும் நோக்கில், மலேசிய வெளிநாட்டு வர்த்தக மேம்பாட்டு கழகம் (MATRADE) புதிய ஏற்றுமதி சந்தைகளை ஆராய்ந்து வருவதாகத் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அதன் தலைவர் டத்தோ ஸ்ரீ ரீசால் மெரிகான் நைனா மெரிகான் கூறுகையில், மத்திய கிழக்குப் பகுதியில் ஏற்பட்ட மோதலால் ஹோர்முஸ் நீரிணை (Selat Hormuz) மூடப்பட்டதால் சர்வதேச வழங்கல் சங்கிலியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றார். இதனால் மலேசியாவின் வர்த்தக நடவடிக்கைகளுக்கு மாற்று வழிகளை தேட வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
இந்த சூழ்நிலையில், மோதலால் பாதிக்கப்படாத நாடுகளில் புதிய சந்தைகளைக் கண்டறியும் முயற்சியில் MATRADE ஈடுபட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். அதற்காக வர்த்தக ஆணையாளர்களுக்கு 'Term of Reference' (TOR) தயாரித்து புதிய சந்தைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளதாகவும் கூறினார்.
மேலும், உலகில் ஏதேனும் பேரழிவு அல்லது சவாலான சூழ்நிலை ஏற்பட்டாலும் அதனுடன் புதிய வாய்ப்புகளும் உருவாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



