சட்டவிரோத MAT REMPIT! 5 ஆண்டுகள் சிறை! சட்டத்தை மாற்றிய அந்தோணி லோக்!

top-news
FREE WEBSITE AD

ஜூன் 24,

சாலைகளில் சட்டவிரோதமாகப் பந்தயத்தில் ஈடுபடும் மோட்டார் சைக்கிளோட்டிகளுக்குத் தகுந்த தண்டனைகள் வழங்கப்பட்டால் MAT REMPIT கலாச்சாரம் குறைக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார். சட்டவிரோதப் பந்தயத்தில் ஈடுபடும் வாகனமோட்டிகளுக்கு எதிராகச் சட்டத்திருத்தம் செய்யப்பட்ட தண்டனைகள் அமலுக்கு வருவதால் இனி அபராதங்கள் மட்டும் போதாது, கடுமையான சிறை தண்டனையும் அவசியம் என அந்தோணி லோக் தெரிவித்தார்.

சட்டவிரோதப் பந்தயத்தில் ஈடுபடுதல், அபாயகரமாக வாகனத்தைச் செலுத்துதல் போன்ற குற்றங்களுக்கு RM 2,000 முதல் RM 10,000 வரையில் அபராதமும் 2 ஆண்டுகள் சிறையும் விதிக்கப்படும் என அந்தோணி லோக் தெரிவித்தார். மீண்டும் மீண்டும் பந்தயத்தில் ஈடுபடும் MAT REMPIT ஓட்டுநர்களுக்கு RM 5,000 முதல் RM 20,000 வரையில் அபராதமும் 5 ஆண்டுகள் சிறையும் விதிக்கப்படும் என அந்தோணி லோக் தெரிவித்தார். போக்குவரத்து விதிகளை மீறும் வாகனமோட்டிகள் விபத்தை ஏற்படுத்தினால் மட்டுமே சிறை தண்டனை விதிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது வேகக் கட்டுப்பாட்டை மீறியும், அபாயகரமாக வாகனத்தைச் செலுத்தினாலேயே இந்த தண்டனைகள் வழங்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *