மொரீசியஸ் தமிழ்க் கல்வியாளர்களுடன் மலேசியத் தமிழ்க் கல்வியாளர்கள் சந்திப்பு!
- THINAGAREN SANGGAREN
- 26 Jul, 2026
ஜூலை 26,
மொரீசியஸிலிருந்து மலேசியாவுக்குக்
கல்விச் சுற்றுலாவை மேற்கொண்டிருக்கும் 15 தமிழ்க் கல்வியாளர்களுடன் மலேசியத்
தமிழ்க் கல்வியாளர்கள் இன்று காஜாங்கில் சிறப்புச் சந்திப்பை நடத்தினர்.
மலேசியாவில் தமிழ்க்கல்வி, தமிழர் வாழ்வியல் குறித்து பல்வேறு
கருத்துப் பகிர்வுகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் மொரிசீயஸ் விரிவுரையாளர் முனைவர்
புலவன் தலைமையிலானக் குழுவினர் மலேசியாவில் நிலைத்திருக்கும் தமிழியல்
சிந்தனைகளும் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகள் மிகவும் ஈர்க்கத்தக்க வகையில் இருப்பதாகத்
தெரிவித்தார்.
மலேசியா
மொரிசியஸ் தென்னாப்பிரிக்கா சமூகப் பண்பாட்டு இயக்கத்தின் முயற்சியில் ஏற்பாடு
செய்யப்பட்டிருந்த இச்சந்திப்பு நிகழ்ச்சியில் விரிவுரையாளர் டத்தோக் பரமசிவம்
சிறப்புரையாற்றினார். தமிழ் என்பது மொழி மட்டுமல்ல, அது பல தலைமுறைகள் கடந்து நிலைத்திருக்கும்
உயிரியல் மாண்பு என்பதால் அதனை அடுத்த தலைமுறைக்கும் நாம் கடத்த வேண்டும் என
விரிவுரையாளர் டத்தோக் பரமசிவம் கேட்டுக்கொண்டார். இயங்கலை தொழில்நுட்பத்தின்
மூலமாக அடுத்த தலைமுறைக்கு நம் தமிழியல் சிந்தனைகளைப் புகட்ட வேண்டும். நாம்
வாழ்ந்த போது இருந்த தமிழின் செழுமையை நம் அடுத்த தலைமுறையும் பெற வேண்டும்.
அதற்கு நாம் இந்த அறிவியல் தொழில்நுட்பத்தில் தமிழ்மொழியின் ஆளுமையை நிரூபிக்க
வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



