படகிலிருந்து தவறி விழுந்தவர் சடலமாக மீட்பு!

- Sangeetha K Loganathan
- 18 Dec, 2024
டிசம்பர் 18,
படகிலிருந்து தவறி விழுந்த 30 வயது ஆடவரின் உடல் கடலில் 3 மைல் தூரத்தில் சடலமாக மீட்கப்பட்டதாகப் பேராக் மாநில மீட்பு ஆணையத்தின் உதவி இயக்குநர் Sabarozi Nor Ahmad தெரிவித்தார். Ng Ka Wan எனும் 30 வயது ஆடவர் TSL Fishery Fish Jetty இல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகைப் பழுதுபார்க்கும் போது கடலில் தவறி விழுந்ததாக நம்பப்படுகிறது.
நேற்று முந்தைய நாள் மாலை முதல் சுமார் 16 காவல் அதிகாரிகள், 18 மீட்பு அதிகாரிகள் அவரைத் தேடும் பணியில் ஈடுபட்டதாக அவர் தெரிவித்தார். நேற்று மாலை 5.40 மணியளவில் அவர் தவறி விழுந்த இடத்திலிருந்து 3 மைல் தூரத்தில் அவரின் உடல் சடலமாக மீட்கப்பட்டதாக மீட்பு ஆணையத்தின் உதவி இயக்குநர் Sabarozi Nor Ahmad தெரிவித்தார்.
Seorang lelaki berusia 30 tahun, Ng Ka Wan, ditemui mati selepas terjatuh dari bot semasa membaikinya di TSL Fishery Jetty. Mayatnya dijumpai 3 batu nautika dari lokasi kejadian oleh pasukan penyelamat selepas pencarian bermula malam sebelumnya.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *