குப்பை லாரியில் ஆண் சிசு! தலைநகரில் பரபரப்பு!
- Thinagaren Sanggaren
- 12 Dec, 2025
டிசம்பர் 12,
குப்பை லாரியில் இறந்த நிலையில் 25 வாரங்களான ஆண் சிசு கண்டெடுக்கப்பட்டது. நேற்று நண்பகல் 12.51 மணியளவில் பொதுமக்களிடமிருந்து புகார் அழைப்பைப் பெற்றதும் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக Cheras மாவட்டக் காவல் ஆணையர் Aidil Bolhassan தெரிவித்தார். புக்கிட் ஜாலிலில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்புப் பகுதியிலிருந்து குப்பைகளை எடுத்தபோது அந்த சிசு குப்பை லாரிக்குள் இருந்ததாகத் துப்புரவுப் பணியாளர்கள் வாக்குமூலம் அளித்துள்ளதாக Cheras மாவட்டக் காவல் ஆணையர் Aidil Bolhassan தெரிவித்தார்.
சம்மந்தபட்ட அடுக்குமாடிக் குடியிருப்புப்
பகுதியில் சந்தேகத்திற்குரிய நால்வரிடம் இது குறித்து விசாரணை நடத்தப்பட்டிருப்பதாகவும்
எந்தவொரு கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் Cheras மாவட்டக் காவல் ஆணையர் Aidil Bolhassan தெரிவித்தார்.
மீட்கப்பட்ட கரு ஆண் சிசு என்றும் உடலின் பல பகுதிகளில் ஏற்பட்ட காயத்தாலும் எலும்பு
முறிவுகளாலும் சிசு உயிரிழந்திருப்பதாகவும் பிரேதப்பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



