ஆற்றில் வலையில் சுற்றப்பட்ட நிலையில் ஆண் சடலம்: கொலை வழக்கில் 2 பேருக்கு காவல் நீட்டிப்பு

top-news
FREE WEBSITE AD

பத்து பஹாட், ஆக. 5-

 ஜொகூர் மாநிலம் பாரிட் ராஜா அருகே தஞ்சோங் செம்ப்ரோங் ஆற்றில் வலையால் சுற்றப்பட்ட நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட கொலை வழக்கில் முக்கிய சந்தேகநபர்களாகக் கருதப்படும் இரு ஆண்களுக்கு ஆறு நாட்கள் விளக்கமறியல் உத்தரவிடப்பட்டுள்ளது.

33 மற்றும் 34 வயதுடைய சந்தேகநபர்களை அடுத்த திங்கட்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி முஸ்தாகிம் சுகார்னோ உத்தரவிட்டார்.

பத்து பஹாட் மாவட்ட போலீஸ் தலைவர் உதவி ஆணையர் ஷாருலானுவார் முஷட்டாட் அப்துல்லா சானி கூறுகையில், குற்றவியல் சட்டத்தின் 302-ஆவது பிரிவின் கீழ் கொலை வழக்காக விசாரணையை முழுமையாக்குவதற்காக விளக்கமறியல் கோரப்பட்டதாகத் தெரிவித்தார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *