இறந்த நிலையில் தாய்,மகன் இருவரின் உடல் மீட்பு! – பீடோங்!
- THINAGAREN SANGGAREN
- 25 Mar, 2026
மார்ச் 25,
சுங்கை பெட்டாணி பீடோங் குடியிருப்புப் பகுதியில் உள்ள வீட்டிலிருந்து தாய் மற்றும் அவரின் மகனுடைய உடலைக் காவல்துறை சடலமாக மீட்டுள்ளது. வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதாகப் பொதுமக்களிடமிருந்து அழைப்பு பெற்றதும் சம்பவ இடத்திற்கு மீட்புப் படையினருடன் விரைந்த காவல்துறை வீட்டை உடைத்த போது சமையலறையில் இருவரின் உடலும் கிடந்ததாகக் Kuala Muda மாவட்டக் காவல் ஆணையர் Hanyan Ramlan தெரிவித்தார்.
உயிரிழந்த இருவரும் 70 முதாட்டின் என்றும் 40 வயது ஆடவர் என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவர்கள் இருவரும் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த வீட்டில் வசித்து வருவதாகவும் அவர்களின் உடலில் எந்தவொரு காயங்களும் இல்லை என்றும் Kuala Muda மாவட்டக் காவல் ஆணையர் Hanyan Ramlan தெரிவித்தார். அவர்கள் உயிரிழந்து சுமார் 48 மணி நேரத்திற்கும் மேலாகியிருக்கும் என நம்பப்படுகிறது. மேலதிக விசாரணைக்காக சம்மந்தப்பட்ட இருவரின் உடலையும் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளதாக Kuala Muda மாவட்டக் காவல் ஆணையர் Hanyan Ramlan தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



