கடற்கரையில் அழுகிய உடல் கண்டெடுப்பு! காவல்துறை விசாரணை!
- Thinagaren Sanggaren
- 11 Jan, 2026
ஜனவரி 11,
பகாங்கில் உள்ள சுற்றுலா கடற்கரையில் அழுகிய நிலையில் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. பகாங் பெக்கானில் உள்ள Pantai Lagenda கடற்கரையில் சுற்றுலா பயணிகள் அழுகிய உடலைக் கண்டதும் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்ததாகப் பெக்கான் மாவட்டக் காவல் ஆணையர் Zaidi Mat Zin தெரிவித்தார். உடல் பாகங்கள் சிதைந்து அழுகிய நிலையில் உடல் இருந்ததாகவும் எந்தவோர் அடையாள் ஆவணங்களும் இல்லாததால் உடலின் பாலினம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என Zaidi Mat Zin தெரிவித்தார்.
நேற்று காலை 10 மணிக்கு மீட்கப்பட்ட உடலின் சில பகுதிகளில் பச்சைக் குத்தப்பட்டிருப்பதாகவும் சம்பவ இடத்தில் எந்தவொரு குற்றச்சம்பவங்களுக்கான அடையாளமும் காணப்படவில்லை என்றும் பெக்கான் மாவட்டக் காவல் ஆணையர் Zaidi Mat Zin தெரிவித்தார். முதற்கட்ட விசாரணைக்காக உடலைப் பெக்கான் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றிருப்பதாகவும் பிரேதப் பரிசோதனைக்குப் பின்னர் மேலதிக விசாரணைகளைத் தொடர்வதாகவும் பெக்கான் மாவட்டக் காவல் ஆணையர் Zaidi Mat Zin தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



