பாலத்தின் கீழ் கண்டெடுக்கப்பட்ட மனித எலும்பு கூடு!
.jpg)
- Sangeetha K Loganathan
- 10 Dec, 2024
டிசம்பர் 10,
கோம்பாக்கிலிருந்து ரவாங் செல்லும் சாலையில் அழுகிய நிலையில் ஹெல்மட்டுடன் ஆடவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாகக் கோம்பாக் மாவட்டக் காவல் ஆணையர் Abang Kaderi Abang Wasli தெரிவித்தார். ஹெல்மட் அணிந்த நிலையில் சடலம் அழுகிய நிலையில் இருந்ததாகவும் பணப்பை, கைகடிகாரம் போன்றவை மீட்கப்பட்டிருப்பதாக, பணப்பையில் இருந்த அடையாள அட்டையின் மூலம் அவர் மலேசியர் என்றும், 48 வயது ஆண் என்பதும் இப்போதைக்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சம்மந்தபட்ட பகுதியில் துர்நாற்றம் வீசுவதாகப் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் அப்பகுதியைச் சோதனையிட்டதாக Abang Kaderi Abang Wasli தெரிவித்தார். மேலதிக விசாரணைக்காகப் பிரேதப் பரிசோதனையின் அறிக்கைகாகக் காத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
Mayat lelaki tempatan berusia 48 tahun ditemukan di Rawang Bypass, lengkap berpakaian dan memakai helmet. Kes diklasifikasikan sebagai Mati Mengejut; orang awam diminta membantu siasatan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *