வீட்டில் அழுகிய நிலையில் முதியவரின் உடல் மீட்பு!

top-news

மார்ச் 16,

பேராக்கில் உள்ள ஒரு வீட்டில் இருந்தபடியே உயிரிழந்த முதியவரின் உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது. நேற்று இரவு சிம்பாங் பூலாயிக் உள்ள Seri Tasik Botani, குடியிருப்புப் பகுதியில் உள்ள ஒரு வீட்டிலிருந்து 70 வயது முதியவரின் சடலம் மீட்கப்பட்டதாகப் பேராக் மாநில மீட்பு ஆணைய உதவி இயக்குநர் Sabarodzi Nor Ahmad தெரிவித்தார். 

இரவு 9.22 மணிக்குச் சம்மந்தப்பட்ட வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதாகப் பொதுமக்கள் தகவல் அளித்ததாகவும் வீட்டின் கண்ணாடிகளை உடைத்து முதியவரின் சடலத்தை மீட்டதாகவும் Sabarodzi தெரிவித்தார். வீட்டின் வரவேற்பறையிலிருந்து அழுகிய நிலையில் அவரின் உடல் மீட்கப்பட்டதாகவும் பிரேதப்பரிசோதனைக்காகச் சிம்பாங் புலாய் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Seorang lelaki warga emas berusia 70 tahun ditemui meninggal dunia dalam keadaan mereput di sebuah rumah di Seri Tasik Botani, Simpang Pulai. Mayat ditemui selepas penduduk melaporkan bau busuk dan pihak penyelamat memecahkan tingkap untuk memasuki rumah.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *