கட்சியில் இனி உறவினர்களுக்குப் பதவியில்லை – மாயாவதி அதிரடி அறிவிப்பு

top-news
FREE WEBSITE AD

லக்னோ, செப். 14 –

பகுஜன் சமாஜ் கட்சியில் இனிமேல் தனது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்களுக்கு எந்த அரசியல் பதவியும் வழங்கப்படாது என்று கட்சித் தலைவர் மாயாவதி திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

உத்தரபிரதேச முன்னாள் முதலமைச்சர் மாயாவதி, லக்னோவில் செய்தியாளர்களிடம் பேசும்போது இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

கட்சியின் நிறுவனர் கன்ஷிராமின் வழியைப் பின்பற்றி, தனது சகோதரர்கள், சகோதரிகள், இளம் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்களை எம்.பி., எம்.எல்.ஏ., மந்திரி உள்ளிட்ட அரசியல் பதவிகளில் இருந்து விலக்கி வைக்க முடிவு செய்துள்ளதாக அவர் கூறினார்.

குறிப்பாக, தனது சகோதரர் ஆனந்த் குமாரின் மகன்களான ஆகாஷ் ஆனந்த் மற்றும் ஈஷான் ஆனந்த் ஆகிய இருவருக்கும் கட்சியில் எந்த அரசியல் பொறுப்பும் வழங்கப்படாது என்றும், இது தனது இறுதியான முடிவு என்றும் மாயாவதி தெரிவித்தார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *