இது தவறுதான்! MCA தலைவரைச் சந்திக்கிறேன்! ZAHID HAMIDI விளக்கம்!
- THINAGAREN SANGGAREN
- 25 Oct, 2026
அக்தோபர் 25,
நேற்று நடைபெற்ற மலாக்கா மாநிலச் சட்டமன்றத் தேர்தலுக்கான பாரிசான் வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் ம.சீ.ச தலைவர் Datuk Seri Wee Ka Siong வெளிநடப்பு செய்திருப்பது குறித்து விரைவில் சுமூகமாகத் தீர்க்கப்படும் என பாரிசான் கூட்டணித் தலைவரான Datuk Seri Ahmad Zahid Hamidi தெரிவித்தார். 31 அக்தோபர் வேட்பு மனு தாக்கலுக்கு முன்னதாகவே இந்த சுமூகமானப் பேச்சுவார்த்தையை நடத்துவதாகவும் கூட்டாக விவாதிக்கப்பட்டு தீர்வுக் காணப்படும் என Datuk Seri Ahmad Zahid Hamidi தெரிவித்தார்.
வேட்பாளர் அறிமுகத்திற்கு முன்னமே ம.சீ.ச தலைவர் Datuk Seri Wee Ka Siong இயல்பாகவே இருந்தார். பாரிசான் செயற்குழுவிலிருந்து Datuk Seri Wee Ka Siongக்கு வேட்பாளர் பட்டியல் முன்னமே வழங்கப்பட்டிருக்கும் என்றும் அந்த வேட்பாளர் பட்டியலை Datuk Seri Wee Ka Siong ஏற்றுக் கொண்டதால் அவர் இயல்பாக இருப்பதாக தாம் நினைத்ததாகவும் Datuk Seri Ahmad Zahid Hamidi தெரிவித்தார். ஆனால் பாரிசான் செயற்குழு வேட்பாளர் பட்டியலை ம.சீ.ச தலைமைக்கு அனுப்பவில்லை என்பதைத் தாமதமாகவே தனக்கு தெரிவிக்கப்பட்டதால் இந்த குழப்பம் ஏற்பட்டதற்கு முக்கிய காரணம் என்றும் இது பாரிசான் செயற்குழுவின் தவறுதான் என்றும் Datuk Seri Ahmad Zahid Hamidi தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

