ம.சீ.சவின் பயம்! டி.ஏ.பிக்கு வெற்றி! - ANTHONY LOKE!
- THINAGAREN SANGGAREN
- 19 Jul, 2026
ஜூலை 19,
நெகிரி செம்பிலான் தேர்தலில் ம.சீ.ச பயந்து, அதன் பாரம்பரியமான 3 சட்டமன்றங்களையும் கூட்டணிக் கட்சிகளுக்கு விட்டுக் கொடுத்திருப்பது பயத்தின் வெளிப்பாடு என டி.ஏ.பி கட்சியின் பொதுச் செயலாளர் Anthony Loke தெரிவித்தார். ம.சீ.சவின் பாரம்பரியமான Lobak, Mambau, Lukut ஆகிய 3 தொகுதிகளிலும் தொடர்ச்சியாக டி.ஏ.பியிடம் ம.சீ.ச தோல்வி அடைந்து வருகிறது என்பதால் இந்த சட்டமன்றத் தேர்தலில் அந்த 3 சட்டமன்றங்களையும் பெரிக்காத்தானுக்கு விட்டுக் கொடுத்திருக்கிறது என Anthony Loke சுட்டிக் காட்டினார்.
DAP நெகிரி செம்பிலான் தலைவராகவும் இருக்கும் Anthony Loke, பாரம்பரியத் தொகுதியில் போட்டியிட வேண்டாம் என்ற MCA-வின் முடிவு, PN உடனான ஒரு புரிந்துணர்வின் மூலம் பாரிசான் நேஷனல் (BN) பல தொகுதிகளில் நேருக்கு நேர் போட்டியிட வழிவகுக்கும் ஒரு அரசியல் தந்திரம் என தெரிவித்தார். டி.ஏ.பியைப் பழிவாங்குவதாக நினைத்து ம.சீ.ச தனது சொந்த சமூகத்தின் ஆதரவையும் இழந்து வருகிறது என Anthony Loke தெரிவித்தார். பாரிசானுக்காக ம.சீ.ச தியாகம் செய்துள்ளது. ஆனால் மக்களுக்காகவும் ம.சீ.சவின் உறுப்பினர்களுக்காகவும் ம.சீ.ச இந்த தியாகத்தில் ஒரு விழுக்காடு கூட செய்ததில்லை என Anthony Loke தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



