ஜொகூரில் வாங்கிய அடி நினைவிருக்கட்டும்! டி.ஏ.பிக்கு ம.சீ.ச கண்டனம்!

top-news
FREE WEBSITE AD

ஜூலை 21,

ம.சீ.சவைத் தொடர்ந்து விமர்சிப்பதற்குப் பதிலாக டி.ஏ.பி ஜொகூர் மாநிலச் சட்டமன்றத் தேர்தலில் அடைந்த தோல்வியை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என ம.சீ.ச தலைவர் DATUK SERI WEE KA SIONG தெரிவித்தார். நெகிரி செம்பிலானில் ம.சீ.ச கட்சி சீனர்களின் ஆதரவை இழந்து விட்டதாக டி.ஏ.பியின் அந்தோணி லோக் நினைத்திருந்தால் அது அவருடைய சொந்த கருத்து. ஆனால் நெகிரி செம்பிலானில் கடந்த 2013 முதல் ஆட்சியில் இருக்கும் டி.ஏ.பி சீனர்களின் ஆதரவைப் பெற்றதா என்றால் அது கிடையாது என DATUK SERI WEE KA SIONG தெரிவித்தார்.

நீங்கள் ஆட்சியில் இருந்த போது மக்களுக்கு என்ன செய்தீர்கள் என்பதைத் தெரிவித்து வாக்குகள் கேளுங்கள். ம.சீ.சவைக் குறை சொல்வதை விட வேறு அரசியல் ஏதும் டி.ஏ.பிக்குத் தெரியாது. எங்கள் நீங்கள் வைக்கும் விமர்சனங்களை நாங்கள் ஏற்கிறோம். எங்கள் தவறுகளைத் திருத்திக் கொண்டு மீண்டும் மக்கள் நம்பிக்கையைப் பெற ம.சீ.ச தொடர்ந்து செயல்படும். ஆட்சியிலிருந்து மாநிலச் சட்டமன்றங்களில் டி.ஏ.பி அடைந்த தோல்விக்கு அந்தோணி லோக் என்ன செய்ய போகிறார் என DATUK SERI WEE KA SIONG கேள்வி எழுப்பினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *