எம்சிஏ, பாரிசானுடன்தான் பயனிக்கிறது-டத்தோஶ்ரீ ஜொஹாரி அப்துல் கானி
- Tamil Malar (Reporter)
- 09 Dec, 2025
கோலாலம்பூர், டிச. 9-
அம்னோவின் உதவித்தலைவர், அமைச்சருமான டத்தோஶ்ரீ ஜொஹாரி அப்துல் கானி, எம்சிஏ (MCA) இன்னும் பாரிசான் நேஷனல் (BN) கூட்டணியில் உறுதியாக இணைந்திருப்பதாகவும், இரு கட்சிகளின் உறவு நல்ல நிலையில் தொடர்கிறது என்றும் தெரிவித்தார்.
அவர் இன்று ஊடகங்களிடம் பேசியபோது, ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் தங்களுடைய தனிப்பட்ட நிலைப்பாடும் உள்கட்டமைப்பும் இருப்பதை வலியுறுத்தினார். எந்த முடிவும், அந்தக் கட்சியின் அரசியல் சூழல், கணிப்புகளின் அடிப்படையில் உருவாகும் எனவும் அவர் தெரிவித்தார்.
“இன்று வரை பார்க்கும்போது, MCA BN-இலிருந்து விலகும் அறிகுறி எதுவும் இல்லை. BN, MCA ஆகிய இரு கட்சிகளுக்கும் இடையே 50 வருடங்களுக்கு மேல் நீடிக்கும் மிக வலுவான உறவு உள்ளது,” என்றார்.
அவர் மேலும் உலக அரசியல் சூழலை எடுத்துரைத்து, தற்போதைய காலகட்டத்தில் எந்த நாட்டிலும் ஒரு கட்சிக்கு முழு அதிகாரம் கிடைப்பது எளிதல்ல என்றும் கூறினார். பல நாடுகள் கூட்டணி அமைப்பில் செயல்படுகின்றன; எனவே அரசியல் ஒத்துழைப்பும், நீண்டகால உறவும்தான் நிலைத்தன்மைக்கு முக்கியமானவை என அவர் வலியுறுத்தினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



