ம.இ.கா மாதிரி பெரிக்காத்தானில் இணையமாட்டோம்! பாஸ் கட்சிக்கு எதிராக ம.சீ.ச தீர்மானம்!
- Thinagaren Sanggaren
- 08 Dec, 2025
டிசம்பர் 8,
பாரிசானிலிருந்து வெளியேறி பெரிக்காத்தானில் இணைந்துக்கொள்ளும்படியாக ம.சீ.ச குறித்து வெளிவரும் செய்திகளுக்கு ம.சீ.ச தலைவர் Datuk Seri Wee Ka Siong முற்றுப்புள்ளி வைத்துள்ளார். பெரிக்காத்தான் கூட்டணியில் பாஸ் கட்சி இருக்கும் வரையில் ம.சீ.ச பெரிக்காத்தானில் இணையாது என Datuk Seri Wee Ka Siong திட்டவட்டமாகத் தெரிவித்தார். ம.இ.கா பெரிக்காத்தானில் இணைவதாக வெளிப்படையாக அறிவித்திருப்பது வேதனையாக இருந்தாலும் ம.சீ.ச பாரிசானிலிருந்து வெளியேற வேண்டிய சூழல் இன்னும் மிதமாகவே உள்ள நிலையில் பாரிசானுடன் சுமூகமானப் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவே ம.சீ.ச விரும்புவதாக Datuk Seri Wee Ka Siong தெரிவித்தார்.
அம்னோ தற்போது டி.ஏ.பியுடன் ஒன்றிணைந்து ஆட்சியை அலங்கரித்தாலும் அம்னோ அதன் பங்காளிக் கட்சிகளை ஒதுக்கி வைத்துவிட்டு டி.ஏ.பியுடன் உறவாடுவது ம.சீ.சவுக்கு வருத்தமளிப்பதாகவும் Datuk Seri Wee Ka Siong தெரிவித்தார். ஆனால் பாரிசானிலிருந்து வெளியேறி பெரிக்காத்தானில் ம.சீ.ச இணைந்திடுமா என்றால் அது பாஸ் கட்சி அதன் கொள்கைகளையும் சீனர்கள் மீது பாஸ் கட்சி கொண்டிருக்கும் சர்ச்சைக்குரிய மனப்போக்கை மாற்றிக்கொண்டால் மட்டுமே நடக்கும் என்றால் பாஸ் கட்சி அதன் பழமைவாதத்தை மாற்றிக்கொள்ளாது என Datuk Seri Wee Ka Siong தெரிவித்தார். பாஸ் கட்சி சீனர்கள் மீது கொண்டிருக்கும் வெறுப்பால் ம.சீ.சவுக்கும் அரசியல் களத்தில் பின்னடைவையே ஏற்படுத்தும் என்பதை ம.சீ.ச தலைமை உணர்ந்திருப்பதாக அதன் தலைவர் Datuk Seri Wee Ka Siong விளக்கமளித்தார்,
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



